மெடி 60

மெடி 60

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் “Medi 60” ஆனது ஒரு சுகாதாரக் காப்புறுதித் திட்டம் ஆவதோடு, நாட்டில் உள்ள சிரேஷ்ட பிரஜைகளின் (60 வயது) தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இது மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது. உங்கள் நிதி முதலீட்டின் அடிப்படையில் 3 தொகுப்புகளிலிருந்து உங்களுக்கு மிகவும் பொருத்தமான மருத்துவத் திட்டத்தை நீங்கள் தெரிவு செய்யலாம்.

அனுகூலங்கள்

மருத்துவமனைச் சேர்ப்பு அனுகூலங்கள் – தனியார் மருத்துவமனைகள்

    • அறைக் கட்டணம் உட்பட்ட மருத்துவமனை மற்றும் பராமரிப்பு விடுதி (Nursing home) பராமரிப்புக் கட்டணங்கள்
    • ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களின் கட்டணம், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்களின் கட்டணம்.
    • மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை செலவுகள், அறுவை சிகிச்சை அரங்கின் பயன்பாடு உள்ளிட்ட தாதிக் கட்டணங்கள், மருத்துவமனையில் சேர்க்கும் ஆலோசகர் நிபுணரின் பரிந்துரையின் பேரில் விசாரணைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை.

மருத்துவமனைச் சேர்ப்பு அனுகூலங்கள் – அரசாங்க மருத்துவமனைகள்

    • அரசாங்க மருத்துவமனை தினசரி உதவித்தொகை - அதிகபட்சம் 15 நாட்கள் வரை ("COVID-19 தொற்று காரணமாக அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், ஒரு நாளைக்கு ரூ. 1,000/- வீதம், மேலே குறிப்பிட்ட 15 நாள் வரையறைக்குள் வழங்கப்படும். இதில், ஒரு இரவு ஒரு நாளாக கணக்கிடப்படும்”.)
    • அரச மருத்துவமனையின் பணம் செலுத்தாத விடுதியில் உள்நோயாளராக இருக்கும் போது கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் பரிசோதனை, ஸ்கேன் மற்றும் எக்ஸ் கதிர் ஆகியவற்றுக்கான செலவுகள் (அவற்றுக்கான பற்றுச்சீட்டுகளுக்கு உட்பட்டு)

ஒரு நாள் அறுவை சிகிச்சைச் செலவுகள்

  • 135 ஒரு நாள் அறுவை சிகிச்சைச் செலவுகள் காப்புறுதியில் உள்ளடக்கப்படும்.

மேலதிக அனுகூலங்கள்

  • கண்புரை அறுவை சிகிச்சைகள் மற்றும் COVID-19 காரணமாக மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கும் இது பொருந்தும்.

ஏற்கனவே இருக்கின்ற நிலைமைகள்

  • நீரிழிவு, கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் தவிர, ஏற்கனவே இருக்கின்ற மருத்துவ நிலைமைகள் விலக்கப்படுகின்றன.

உரித்துடையவைகள்

  • காப்புறுதி தொடங்கிய நாளிலிருந்து 30 நாட்களுக்குப் பிறகு உரிமைகோரல் செய்யத் தகுதி உண்டு. இது விபத்துகளுக்குப் பொருந்தாது.

1 ஆம் வருட விதிவிலக்குகள்

  • சில குறிப்பிட்ட நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் முதல் பன்னிரண்டு மாதங்களில் விலக்கப்படுகின்றன.

தகைமை

  • 60 வயது முதல் 70 வயது வரையிலான சிரேஷ்ட பிரஜைகள் இந்தக் காப்புறுதியை எடுத்துக் கொள்ளலாம். காப்புறுதியின் பாதுகாப்பு 80 வயதில் முடிவடையும்.

Or drop us an email with any questions you have