வீட்டுப் பாதுகாப்புக் காப்புறுதி

வீட்டுப் பாதுகாப்புக் காப்புறுதி

வீட்டுப் பாதுகாப்பு என்பது, எதிர்பாராத, தவிர்க்க முடியாத அபாயங்கள் மற்றும் பொறுப்புகளிலிருந்து உங்கள் மிக முக்கியமான சொத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு விரிவான வீட்டுக் காப்புறுதித் திட்டம் ஆகும். வீட்டுப் பாதுகாப்பானது, ஒரு பேரழிவு ஏற்பட்டால், உங்கள் வீடு, உங்கள் குடும்பம், உங்கள் மதிப்புமிக்க உடைமைகள் மற்றும் உங்கள் வீட்டுப் பணியாளர்கள் உட்பட அனைவரையும் உள்ளடக்கியது.

நியதிகளும் நிபந்தனைகளும்

    • கட்டிடம் பிரத்தியேகமாக ஒரு தனிப்பட்ட குடியிருப்பாக / வீடாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், ஏனைய நோக்கங்களுக்காகவோ அல்லது வீட்டுக் கைத்தொழிலுக்காகவோ பயன்படுத்தப்படக்கூடாது.
    • கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு குடியிருப்பதற்கேற்ற நிலையில் இருந்தால், அது நல்ல நிலையில் பழுதுபார்க்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
    • செங்கற்கள் / கொங்க்ரீட் / சீமெந்துக் கற்கள் என்பவற்றைக் கொண்டு சுவர் எழுப்பப்பட்டிருப்பதுடன், கூரை பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

அனுகூலங்கள்

பாதுகாப்பு அளிக்கப்படும் அபாயங்கள்

  • தீ மற்றும் மின்னல் தாக்குதல், வெடி விபத்துகள், பூகம்பங்கள், சூறாவளி, புயல், அதிக வெப்பம் மற்றும் வெள்ளப்பெருக்கு, இயற்கை அனர்த்தங்கள், மரங்கள் விழுதல், தொலைபேசிக் கம்பங்கள் மற்றும் விளக்கு கம்பங்கள் விழுதல், விமானங்களினால் ஏற்படுத்தப்படும் சேதம், விமானங்களினால் ஏற்படுத்தப்படும் சேதம், கொள்ளையடித்தல், வீடுடைத்து திருடுதல் அல்லது திருட முயற்சித்தல்.

மேலதிக பாதுகாப்பு அம்சங்கள்:

  • தீவிரவாதம், கலவரங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் உள்நாட்டுக் கலவரங்கள், தீய எண்ணத்துடன் சேதம் விளைவித்தல்.
  • பொருத்தப்பட்ட மற்றும் தகடு கண்ணாடிகளுக்கு ஏற்படும் எதிர்பாராத சேதம்.
  • குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட விபத்துக் காப்புறுதித் திட்டம் மற்றும் வீட்டுப் பணியாளர்களின் எதிர்பாராத மரணம் அல்லது நிரந்தர முழு உடல் ஊனம் - பணியின்போது ஏற்பட்ட காயங்களுக்கு மருத்துவமனை செலவுக்கான உதவித்தொகை (வயது வரம்பு - 60 வயது).


சேதத்திற்கான பாதுகாப்பு:

  • கைக் கண்ணாடிகள் போன்றவற்றைத் தவிர, மற்ற கண்ணாடிகள் எதிர்பாராத விதமாக உடைந்து போதல், பொதுவான பொறுப்புக்கான காப்பீடு.


அதிகப்படுத்தப்பட்ட தனிநபர் விபத்து பாதுகாப்பு:

  • காப்புறுதி செய்யப்பட்ட நபருக்கும், இயற்கையான காரணங்களால் ஏற்படும் மரணத்திற்கும் பாதுகாப்பு (காப்புறுதி செய்தவருக்கு 70 வயது வரை).


பின்வரும் காப்புறுதிகள் மூலம் உங்கள் வீட்டைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்:

  • கட்டடங்கள், வாயில் கதவுகள், நீச்சல் தடாகம், மதில் சுவர்கள்
  • தளபாடங்கள், மின்சார உபகரணங்கள், இலத்திரனியல் உபகரணங்கள் என்பவற்றை உள்ளடக்கிய வீட்டிலுள்ள பொருட்கள்.
  • நகைகள், வீட்டில் வைத்திருக்கும் சொந்தக் காசு, பெறுமதியான கற்கள் (லப்டொப், கணினிகள், தொலைபேசிகள், தனிப்பட்ட கமராக்கள், PC டப்லட்கள் போன்ற) இலத்திரனியல் உபகரணங்கள், இசைக் கருவிகள் போன்ற பெறுமதிமிக்க தனிப்பட்ட பாவனைப் பொருட்கள்.
  • ஓவியங்கள் மற்றும் புராதனப் பொருட்கள்

தகைமை

  • காப்புறுதிப் பத்திரதாரர் சொத்து தொடர்பான காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • இலங்கையின் சட்டத் தொகுப்பின் படி, காப்புறுதிப் பத்திரதாரர் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • காப்புறுதி செய்யப்படும் சொத்துக்கள் / ஆதனங்கள் இலங்கையின் பூளோக எல்லைக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.

செலவுகளை திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடுகள்

  • மீள் கட்டுமான காலப் பிரிவின் போது இடிபாடுகளை அகற்றுதல், மாற்று வசிப்பிடத்துக்கான செலவுகள்.
  • வீட்டு வளவுக்குள் பொது வசதி இணைப்புக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சேதங்கள் (மின்சாரம், தண்ணீர், எரிவாயு இணைப்பு முதலியவை)
  • தொழில்சார் கட்டணங்கள் (பொறியியலாளர், நில அளவையாளர் மற்றும் கட்டடக் கலைஞர் போன்றோருக்கான செலவுகள்)
  • ஆவணங்கள் மற்றும் உறுதிகள் என்பவற்றை மீள உருவாக்குவதற்கான செலவு.
  • Or drop us an email with any questions you have