எங்கள் அடிப்படை தீக் காப்புறுதித் திட்டமானது, கட்டி முடிக்கப்பட்ட, குடியிருக்கும் அல்லது கட்டுமானத்தில் இருக்கும் உங்கள் வீட்டை, தீ அல்லது தீ தொடர்பான அபாயங்களிலிருந்து காப்பீடு செய்கிறது. இக் காப்புறுதியானது, வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளுக்கு ஏற்படும் தற்செயலான தீ அல்லது தீ தொடர்பான அபாயங்களால் ஏற்படும் நிதி இழப்புக்களைக் குறைக்க உதவுவதுடன் வீட்டை உடனடியாக மீட்டெடுக்கவோ அல்லது மீண்டும் கட்டவோ முடியும் என்பதை உறுதி செய்கிறது.