மோட்டர் EV

மோட்டர் EV

புத்திசாலித்தனமான, பசுமையுடனான பாதுகாப்புடன் உங்கள் பயணத்திற்கு வலுவூட்டிடுங்கள். SLIC ஜெனரல் மோட்டர் EV , மேம்பட்ட பாதுகாப்பு, நம்பகமான நாடு தழுவிய ஆதரவு மற்றும் வேகமான டிஜிட்டல் உரிமைகோரல் சேவைகளை இணைத்து, மின்சார வாகன உரிமையாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட விரிவான காப்பீட்டுத் திட்டமாகும். இலங்கையின் வளர்ந்து வரும் நுஏ நிலப்பரப்புக்காக வடிவமைக்கப்பட்ட மோட்டர் EV உங்களை நம்பிக்கையுடனும், வசதியுடனும், ஒப்பிடமுடியாத பராமரிப்புடனும் நகர்த்துகின்றது. தங்கு தடையற்ற வலையமைப்பு, EV -குறிப்பிட்ட பழுதுபார்க்கும் கூட்டாண்மைகள் மற்றும் உங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த இயக்கத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட வெகுமதிகளை அனுபவித்திடுங்கள்.

நன்மைகள்

நெகிழ்வான மற்றும் மலிவு விலை EV திட்டங்கள்

  • உயர்தர கிரெடிட் கார்டுகளில் 0% வட்டி வீதத் தவணைத் தெரிவுகளுடன் மின்சார வாகனங்களுக்கு ஏற்ற காப்பீட்டுத் தொகுப்புகளில் இருந்து தெரிவுசெய்து> உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ற தவணைக் கட்டணம் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளுங்கள்

ஒன்லைனில் புதுப்பிக்கவும்

  • உங்கள் மோட்டர் EV காப்பீடு ஒப்பந்தத்தை ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் வாடிக்கையாளர் போர்டல் மூலம் எந்நேரத்திலும், எவ்விடத்திலும் எளிதாகப் புதுப்பித்துக்கொள்ளலாம். இது துரிதமானது. எளிமையானது, காகிதத் தேவைகளற்றது.

துல்லியமான மற்றும் திறமையான உரிமைகோரல் தீர்வுகள்

  • EV உரிமைகோரல்கள் குறைந்தபட்ச ஆவணங்களுடன் செயல்படுத்தப்படுகின்றன, இது உங்கள் மின்சார வாகனத்தின் மேம்பட்ட மதிப்பு மற்றும் கூறுகளை அங்கீகரிக்கும் வெளிப்படையான தீர்வை உறுதி செய்கின்றது.

விபத்து நடந்த இடத்திலேயே EV சேத மதிப்பீடுகள்

  • எமது தொழில்நுட்ப அதிகாரிகளின் வலையமைப்பினூடாக விபத்து நடந்த இடத்திலேயே மின்சார வாகனங்களுக்கு இணக்கமான ஆய்வுகளுக்காக உங்கள் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடும், இது விரைவான தீர்வுகள்; மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கான ஒப்புதலை உறுதி செய்யும் – நாடளாவிய ரீதியில் 24/7 சேவை, பட்டரி பேக்குகள், சென்சர்கள் மற்றும் மின்சார வாகன கூறுகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களுக்கு ஏற்றது.

மெய்நிகர் EV உரிமைகோரல் உதவி

  • எமது செயலி அல்லது போர்டல் வாயிலாக உங்கள் சேதமடைந்த மின்சார வாகனத்தின் வீடியோக்களைப் பதிவேற்றவும், தகுதிவாய்ந்த EV மதிப்பீட்டாளர் உங்கள் வாகனத்தை தொலைதூரத்தில் மதிப்பாய்வு செய்ய முடியும்.
  • விரைவான அறிக்கைகள், பயணம் இல்லாதது மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மின்சார வாகன பயனர்களுக்கு ஏற்ற வெளிப்புற வேலை நேரங்கள்.
  • வசதியானது. புத்திசாலித்தனமாது. நவீனத்துவம்மிக்கது.

இலவச தனிநபர் விபத்து காப்பீடு

  • விபத்து ஏற்பட்டால்:
    • காப்பீடு செய்யப்பட்டவருக்கு ரூ. 1,000,000 தனிநபர் விபத்து காப்பீடு
    • 3 பயணிகளுக்கு தலா ரூ. 50,000

    (தனியார் மின்சார வாகனங்கள் மற்றும் இரட்டை பயன்பாட்டு மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும்.)

பட்டரி மற்றும் உயர் மின்னழுத்த பாகங்கள் பாதுகாப்பு

  • மோட்டர் EV பின்வருவனவற்றிற்கு மேம்பட்ட காப்பீடுகளை வழங்குகின்றது:
    • பட்டரி பெக்குகள்
    • மின்சார டிரைவட்ரெய்ன் பாகங்கள்
    • உயர் மின்னழுத்த கேபிள்கள்
    • Onboard chargers
    • மீளுருவாக்கம் செய்யும் பிரேக்கிங் அமைப்புகள்
  • பட்டரி வயது மற்றும் வாகன வகையைப் பொறுத்து காப்பீட்டு விதிமுறைகள் மாறுபடும்.

காற்றுப் பை காப்பீடு

  • மின்சார வாகன பழுதுபார்ப்பு தொடர்பான ரூ. 100,000 வரையிலான பணத்தை 3 வேலை நேரங்களுக்குள் பெறுங்கள்> பின்வருவனவற்றிற்கு எந்தத் தேவையும் இல்லை:
    • பழுதுபார்ப்பு மதிப்பீடுகள்
    • பில்கள்
    • மீட்பு
    • தொழிலாளர் ஆவணங்கள்
    • பழுதுபார்ப்புக்குப் பிந்தைய ஆய்வுகள்

பணமில்லா மின்சார வாகன பழுதுபார்க்கும் வசதி

  • மின்சார வாகனம் தயாரிக்கப்பட்ட ஆண்டிலிருந்து 5 ஆண்டுகள் வரை அங்கீகரிக்கப்பட்ட மின்சார வாகன சேவை கூட்டாளர்கள் மற்றும் முகவர்கள் மூலம் பணமில்லா பழுதுபார்ப்புகளை அனுபவிக்கவும்.

கூட்டாளர் EV பழுதுபார்ப்பு நிலையங்கள் மற்றும் சார்ஜிங் வலையமைப்பு அனுகூலங்கள்

  • எமது பிரத்தியேக மோட்டர் EV கூட்டாண்மையுள்ள பழுதுபார்ப்பு நிலையங்களில் உங்கள் மின்சார வாகனத்தை பழுதுபார்க்கலாம்.
    • பணமில்லா தீர்வுகள்
    • அங்கீகரிக்கப்பட்ட உரிமைகோரல்களுக்கு உரிமையாளர் பங்களிப்பு 0%
    • தற்காலிக மின்சார வாகன வாடகை கொடுப்பனவு (10 நாட்கள் வரை)
    • கூட்டாளர் சார்ஜிங் நிலைய தள்ளுபடிகளுக்கான அணுகல்

தகுதி

  • மோட்டர் EV வாங்குவதற்காக

  • காப்புறுதிதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்
  • EV இல் காப்புறுத் தகைமை இருத்தல் வேண்டும்
  • EV இலங்கையின் புவியியல் எல்லைக்குள் இருத்தல வேண்டும்
  • காப்பீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட சட்டப்பூர்வமாக தகுதி பெற்றிருத்தல் வேண்டும்

அல்லது உங்களுக்கு உள்ள ஏதேனும் கேள்விகளுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்