சிறப்பு காப்பீட்டுத் தவணைக் கட்டணங்கள்
- தொகுதியில் உள்ள வாகன அளவைப் பொறுத்து, நீங்கள் சிறப்பு காப்பீட்டு கட்டுப்பணங்களைப் பெறலாம்.
மோட்டார் வாகனத் தொகுதிக்கான காப்புறுதித் தீர்வுத் திட்டமானது விபத்துக்கள் மற்றும் சேதங்களில் இருந்து பாதுகாத்து நிறுவன வாகனத் தொகுதிகளுக்கு முழுமையான மற்றும் செலவு குறைந்த காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்குகிறது. இத் திட்டமானது உங்கள் மதிப்புமிக்க வாகனத் தொகுதியின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. தனிப்பயனாக்கப்பட்ட காப்பீடுகள் உங்கள் வாகனத் தொகுதிகளின் தேவைகள் மற்றும் செயல்பாடுகளைப் பூர்த்தி செய்ய துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருகின்றன.
மொத்த காப்பீட்டுக் கோரிக்கைகள் குறைந்தபட்ச ஆவணங்களுடன் துல்லியமாக செலுத்தப்படுகின்றன.
விபத்துச் சேதங்களின் கள ஆய்வானது 175 இற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப அலுவலர்களைக் கொண்ட எங்கள் குழுவினால் உடனடியாக விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு, பழுதுபார்க்கும் பணிக்கான ஒப்புதலை வழங்குவதற்காக எங்கும், எந்த நேரத்திலும் விபத்துச் சேதத்தை மதிப்பிடுகின்றது.
ஏதேனும் வரையறைகள், நியதிகள், நிபந்தனைகள் மற்றும் மேற்குறிப்பிட்ட காப்புறுதித் திட்ட நன்மைகளின் விலக்குகளுக்கு காப்புறுதித் திட்ட ஆவணத்தை அல்லது காப்புறுதித் திட்ட அட்டவணையைப் பார்க்கவும்.