வியாபாரக் காப்புறுதி

வியாபாரக் காப்புறுதி

வியாபாரக் காப்புறுதியானது, சில்லறை மற்றும் மொத்த வியாபாரங்களை மேற்கொண்டு வரும் கடைக்காரர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் ஆகியோருக்காக என்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சில்லறை வணிகத் துறையின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்தக் காப்புறுதியானது நெகிழ்வான பாதுகாப்பு விருப்பத் தேர்வுகளை வழங்குவதுடன், பல்வேறு ஆபத்துகளுக்கு எதிராக விரிவான பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

காப்புறுதி / பாதுகாப்பு

பிரிவு A ( முக்கிய காப்புறுதி)

    தீ, மின்னல், வேண்டுமென்றே சேதம் விளைவித்தல், வெடிப்பு, சுழல்காற்று, புயல் ,கொந்தளிப்பு ,வெள்ளம், பூகம்பம் / நிலநடுக்கம், இயற்கை அனர்த்தம், கொள்ளை ஆகியவற்றை உள்ளடக்கியது.

பிரிவு B (விருப்பத்தேர்வு பாதுகாப்பு)

    மேலதிகக் கட்டணம் செலுத்துவதன் மூலம் கிடைக்கும் கூடுதல் பாதுகாப்புகள்:

    • காசுக் காப்பீடு (பயணத்தில் இருக்கும் பணம், பாதுகாப்பு பெட்டகம் மற்றும் பணப்பெட்டிகள்)
    • பயணத்தில் இருக்கும் பொருட்களுக்கான காப்பீடு
    • கண்ணாடி உடைவுக்கான காப்பீடு (விபத்தினால் கண்ணாடி உடைதல்)
    • விளம்பரப் பலகைக்கான காப்பீடு
    • இலத்திரனியல் உபகரணங்களுக்கான காப்பீடு
    • இறுதிச் சடங்குச் செலவுகளுக்கான காப்பீடு
    • நம்பிக்கை மோசடி உத்தரவாத காப்பீடு (Fidelity Guarantee cover)
    • உணவு கெட்டுப்போவதால் ஏற்படும் இழப்புகளுக்கான காப்பீடு
    • உரிமை ஆவணங்களுக்கு ஏற்படும் சேதத்திற்கான காப்பீடு

மேலதிக செலவற்ற அனுகூலங்கள்

காப்புறுதிதாரர் அல்லது நியமத்தருக்கு தனிப்பட்ட விபத்துக் காப்புறுதி

சட்டப் பொறுப்புக் காப்புறுதி

இடிபாடுகளை அகற்றுதல்

நில அளவையாளர்களுக்கான / ஆலோசகர்களுக்கான கட்டணம்

சேவை இணைப்புகளுக்கு ஏற்படும் சேதங்கள்

பூட்டு மாற்றத்திற்கான காப்புறுதி

5 தொழிலாளர்களுக்கு இலவச தொழிலாளர் நட்ட இழப்பீட்டுக் காப்புறுதி

தகைமை

  • காப்புறுதிதாரர் சொத்தின் மீது காப்பீடு செய்யக்கூடிய ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்.
  • இலங்கையின் சட்டவாக்க கட்டமைப்புக்கு ஏற்ப, காப்புறுதிதாரர் காப்புறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட தகுதி உடையவராய் இருத்தல் வேண்டும்
  • காப்புறுதி செய்யப்படுகின்ற சொத்துக்கள்/உடைமைகள் இலங்கையின் புவியியல் எல்லைகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.

வர்த்தக வணிகங்களின் மாறும் தன்மைக்கு ஏற்ப வலுவான பாதுகாப்பை வழங்கும் வகையில் இந்தக் காப்புறுதித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இது செயல்பாடுகளில் ஏற்படும் இடையூறுகளைக் குறைத்து, பாதுகாப்புக்களை அதிகப்படுத்துகிறது.

Or drop us an email with any questions you have