கப்பல் சரக்குப் பாகம் மற்றும் இயந்திரக் காப்புறுதி
எங்கள் கப்பல் சரக்குப் பாகம் மற்றும் இயந்திரக் காப்புறுதித் திட்டமானது கடல் மற்றும் நீர்வழிகளில் பயணிக்கும் பிற கப்பல்களின் சரக்குப் பாகங்கள் மற்றும் இயந்திரங்களுக்கு விரிவான பாதுகாப்பை வழங்குகிறது, அவற்றில் பின்வருவன:
- தீ
- வெடிப்புக்கள்
- வெளியார் திருட்டு
- கப்பலில் இருந்து சரக்குகள் வீசப்படுதல்
- பூகம்பம் / எரிமலை வெடிப்புக்கள் / மின்னல் தாக்குதல்
- கொதிகலன்கள் வெடித்தல், அடித்தண்டுப் பகுதியில் ஏற்படும் முறிவு அல்லது கப்பல் சரக்குப் பகுதியில் அல்லது இயந்திரங்களில் இருக்கும் வெளியில் தெரியாத ஒரு குறைபாடு
- சரக்குகளை அல்லது எரிபொருளை ஏற்றும் பொழுது / இறக்கும் பொழுது / மற்றொரு கப்பலுக்கு மாற்றும் பொழுது ஏற்படும் விபத்துக்கள்
- கப்பல் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் கப்பலோட்டிகள் தரப்பில் இடம்பெறும் கவனயீனம்
*மேலதிக தவணைக் கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் போர், வேலை நிறுத்தங்கள், கலவரங்கள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சிகள் மற்றும் பயங்கரவாதம் என்பவற்றின் தாக்கங்களுக்கெதிராக காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.