மின்னணு உபகரணக் காப்புறுதி

மின்னணு உபகரணக் காப்புறுதி

இன்றைய வேகமான வணிக உலகில், உங்கள் தொழில்நுட்ப சொத்துக்களைப் பாதுகாப்பது முக்கியமானதாகும். எங்கள் மின்னணு உபகரணக் காப்புறுதித் திட்டமானது உங்கள் முன்னேற்றத்தை பாதிக்கக்கூடிய சாத்தியமான ஆபத்துகளுக்கு எதிராக விரிவான பாதுகாப்பை உறுதி செய்து, பரந்த அளவிலான மின்னணு மற்றும் மின்சார உபகரணங்கள் மற்றும் கருவிகளை உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனுகூலங்கள்

முக்கிய காப்பீடு

    அனைத்துமடங்கிய இந்த காப்புறுதிப் பத்திரம் பின்வரும் அபாயங்களிலிருந்து உங்கள் மின்சார மற்றும் மின்னணு உபகரணங்களுக்குப் பாதுகாப்பினை வழங்குகின்றது:

    • தீ மற்றும் இடி, மின்னல் தாக்குதல்
    • வெடிப்புக்கள் காரணமாக ஏற்படும் சேதம் அல்லது இழப்பு
    • விமானங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் சேதம்
    • புகை மாசாக்கல் தாக்கம்
    • தண்ணீர் மற்றும் ஈரப்பதன் சம்பந்தப்பட்ட சேதங்கள்
    • மின் கசிவு மற்றும் ஏனைய மின்சாரக் கோளாறுகள்
    • வடிவமைப்பு, தயாரிப்பு, ஒன்று சேர்ப்பு மற்றும் கட்டுமானத் தவறுகள்
    • குறைபாடுகளுடன் கூடிய இயக்குதல் மற்றும் தொழிலாளர்கள் வேண்டுமென்றே செய்யும் காரியங்கள்
    • திருட்டு/ களவு

தகைமை

  • காப்புறுதிதாரர் குறிப்பிட்ட சொத்தின் மீது காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • காப்புறுதிப் பத்திரதாரர் இலங்கையின் சட்டவாக்கக் கட்டமைப்பின் பிரகாரம் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • காப்புறுதி செய்யப்படும் சொத்து/ ஆதனங்கள் இலங்கையின் புவியியல் எல்லைக்கு உட்பட்டிருத்தல் வேண்டும்.

இந்தக் காப்பீடு, தொழிலில் நிலையான செயல்பாட்டையும் தொழில்தொடர்ச்சியையும் உறுதி செய்வதற்காக, மின்னணு மற்றும் தகவல்தொடர்பு சாதனங்களுக்கு வலுவான பாதுகாப்பு தேவைப்படும் நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

Or drop us an email with any questions you have