தேயிலைத் தொழிற்சாலை காப்புறுதி

தேயிலைத் தொழிற்சாலை காப்புறுதி

தேயிலைத் தொழிர்சாலை காப்புறுதியானது இலங்கையின் தேயிலைத் துறையினருக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ் விரிவான காப்புறுதியானது, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அவற்றின் களஞ்சியசாலைகள் என்பவற்றையும் தேயிலைத் தொழிற்சாலைகளின் இயந்திரங்கள், கட்டிடங்கள், கையிருப்புக்கள், இடம்பெற்றுவரும் வேலைச் செயல்முறைகள் என்பன எதிர்கொள்ளக்கூடிய அபாயங்களையும் உள்ளடக்குகின்றது. இக் காப்புறுதித் திட்டமானது இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன், தேயிலைத் தொழிலின் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட காப்புறுதித் தெரிவினை வழங்குகிறது.

காப்புறுதி / பாதுகாப்பு

பிரிவு A ( முக்கிய காப்புறுதி)

    தீ, மின்னல், வேண்டுமென்றே சேதம் விளைவித்தல், வெடிப்பு, சுழல்காற்று, புயல் ,கொந்தளிப்பு ,வெள்ளம், பூகம்பம் / நிலநடுக்கம், இயற்கை அனர்த்தம், கொள்ளை, வேலை நிறுத்தம், கலவரம் மற்றும் உள்நாட்டுக் கிளர்ச்சி ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

பிரிவு B (கூடுதல் கட்டணத்தில் விருப்பத்தேர்வுகளுடனான காப்புறுதி)

    • நம்பிக்கை உத்தரவாதக் காப்புறுதி
    • ஊழியர்களுக்கான தனிப்பட்ட விபத்துக் காப்புறுதி
    • வேலையாட்களுக்கான நஷ்டஈட்டுக் காப்புறுதி
    • தீ மற்றும் அதனுடன் தொடர்புபட்ட இடர்களினால் ஏற்படும் இடைஞ்சல் காரணமாக வேலைச் செலவுகளில் ஏற்படும் அதிகரிப்பு
    • தொழிற்சாலை இயந்திரங்கள் தொடர்பான இயந்திரப் பழுதடைவு காப்புறுதிப் பாதுகாப்பு
    • காசுக் காப்புறுதி (போக்குவரத்திலிருக்கும் காசு, பெட்டகங்கள் மற்றும் இழுப்பறைகளில் வைக்கப்பட்டிருக்கும் காசு)
    • தேயிலைக் கையிருப்புகளைப் கொண்டுபோதலுடன் தொடர்பான போக்குவரத்திலுள்ள பண்டங்களுக்கான காப்புறுதி
    • தகடுக் கண்ணாடி காப்புறுதி பாதுகாப்பு
    • பெயர்ப் பலகைக் காப்புறுதி பாதுகாப்பு
    • இலத்திரனியல் உபகரணங்கள் காப்புறுதிப் பாதுகாப்பு
    • காசுக் காப்புறுதி
    • மோட்டார் இயந்திரங்களுக்கு ஏற்படும் சேதங்கள்

மேலதிக செலவற்ற அனுகூலங்கள்

காப்புறுதிதாரர் அல்லது நியமத்தருக்கு தனிப்பட்ட விபத்துக் காப்புறுதி

சட்டப் பொறுப்புக் காப்புறுதி

இடிபாடுகளை அகற்றுதல்

நில அளவையாளர்களுக்கான / ஆலோசகர்களுக்கான கட்டணம்

தகைமை

  • காப்புறுதிதாரர் சொத்தின் மீது காப்பீடு செய்யக்கூடிய ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்.
  • இலங்கையின் சட்டவாக்க கட்டமைப்புக்கு ஏற்ப, காப்புறுதிதாரர் காப்புறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட தகுதி உடையவராய் இருத்தல் வேண்டும்.
  • காப்புறுதி செய்யப்படுகின்ற சொத்துக்கள்/உடைமைகள் இலங்கையின் புவியியல் எல்லைகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.

இக் காப்புறுதியானது தேயிலை உற்பத்தியாளர்கள் முகங்க்கொடுக்கும் தனித்துவமான சவால்களை இணங்கண்டு அவர்களுடைய செயல்பாடுகளுக்கு ஏற்படும் குறைந்தபட்ச இடையூறுகளை உறுதி செய்யவும் பாதுகாப்பையும் உற்பத்தியையும் அதிகரிக்கவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Or drop us an email with any questions you have