கப்பற் சரக்குக் காப்புறுதி

கப்பற் சரக்குக் காப்புறுதி

SLIC ஜெனரல் கப்பற் சரக்குக் காப்புறுதியானது போக்குவரத்தின் போது ஏற்படும் பொருட்களுக்கு உறுதியான காப்புறுதியை வழங்குவதுடன், பல்வேறு கடல்சார் ஆபத்துக்கள் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திற்கு எதிராக பாதுகாப்பினை வழங்குகிறது. இது ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் ஒழுங்குமுறை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், கடல் வர்த்தகத்தின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு விவரங்கள்

கப்பற் சரக்கு உறுப்புரை (A)

    இது குறிப்பிட்ட விலக்குகளுடன் நிறுவன சரக்கு உறுப்புரை (A) இன் கீழ் இழப்பு அல்லது சேதம் தொடர்பான அனைத்து அபாயங்களையும் உள்ளடக்குகிறது.

கப்பற் சரக்கு நிறுவன உறுப்புரைகள் (B) அல்லது (C) என்பவற்றின் காப்புறுதிப் பாதுகாப்பு

    இடர் மேலாண்மைக்கு ஒரு நெகிழ்வான அணுகுமுறையை வழங்கி, இந்த உருப்புறைகளின் கீழ் பெயரிடப்பட்ட ஆபத்துகளுக்கான பாதுகாப்பை வழங்குகிறது.

மொத்த / இழப்பு காப்பீடு

    காப்புறுதித் திட்ட விதிமுறைகளின் கீழ் மொத்த இழப்பு சூழ்நிலைகளுக்கான இழப்பீட்டை உறுதி செய்கிறது.

விரிவான காப்புறுதிப் பாதுகாப்பு

    மேலதிக கட்டுப்பண விருப்பங்கள், போர், வேலைநிறுத்தங்கள், கலவரங்கள், சிவில் கலவர அபாயங்கள் மற்றும் களஞ்சியப்படுத்தல் தொடர்பாக ஏற்படக் கூடிய நிகழ்வுகள் ஆகியவற்றிற்கு எதிராக நீடிக்கப்பட்ட காப்பீட்டை அனுமதிக்கின்றன.

உள்நாட்டில் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான பாதுகாப்பு

    உள்நாட்டு வழித்தடங்களுக்கான காப்பீட்டை விரிவுபடுத்தி, இலங்கைக்குள் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கான பாதுகாப்பை வழங்குகிறது.

ஏனைய அனுகூலங்கள்

விரும்பப்படும் காப்புறுதிப் பாதுகாப்பு

காப்புறுதிதாரர்களுக்கு தாங்கள் விரும்பிய காப்பீட்டின் கால எல்லைகளை பேரம்பேச முடிவதோடு ஒப்புறுதியாளர்களுக்கு குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு காப்பீட்டை வடிவமைக்க முடியும்.

உள்ளூர் போக்கவரத்து சேவையாளர்களின் தேவைகளை நிறைவு செய்தல்

ஏற்றுதல் மற்றும் இறக்குதல் செயற்பாடுகளின் போது முகங்கொடுக்கின்ற ஆபத்துக்களை உள்ளடக்குகி இலங்கையினுள் பொருட்களைக் கையாளுகின்ற உள்நாட்டு போக்குவரத்தாளர்களுக்கான விசேட ஏற்பாடுகள்.

செயல்திறன் காப்பீடு

ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு விரிவாக பயனளிக்கும் வகையில் அவர்களின் பயணம் முழுவதும் பொருட்களுக்கு விரிவான காப்பீட்டை வழங்குகிறது.

பாரியளவிலான இறக்குமதியாளர்கள் / ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கான விசேட வசதி

முக்கிய இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு அவர்களின் விநியோகச் சங்கிலித் தளவாடங்களுடன் ஒருங்கிணைக்கும் தடையற்ற கடல் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தகைமை

  • ஆர்வம் தேவை: காப்புறுதி பத்திரதாரர்களுக்கு சரக்குகளில் காப்பீடு பெறக்கூடிய ஆர்வம் இருத்தல் வேண்டும்.
  • சட்ட மற்றும் ஒழுங்குமுறை இணக்கம்: காப்புறுதிப் பத்திரதாரர் இலங்கையின் சட்டவாக்கக் கட்டமைப்பின் பிரகாரம் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • சரக்கு விவரக்குறிப்புகள்: ஒப்படைக்கப்படும் சரக்குகள் கடற் போக்குவரத்துக்கென சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்க பண்டங்களாக இருந்து வருதல் வேண்டும்.

SLIC ஜெனரலை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

SLIC ஜெனரலின் கப்பற் சரக்குக் காப்புறுதியானது, உலகளாவிய வர்த்தகத்தின் ஆற்றல் மிக்க தேவைகளுக்கு ஏற்ப விரிவான பாதுகாப்பை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பால் ஆதரிக்கப்படுகிறது. எங்கள் விரிவான காப்பீட்டு விருப்பங்கள் மற்றும் அர்ப்பணிப்பு ஆதரவுடன், உங்கள் பொருட்கள் ஒவ்வொரு அடியிலும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்கிறோம்.

Or drop us an email with any questions you have