கையிருப்புக்களில் ஏற்படும் சீர்குலைவுக்கான காப்புறுதி

கையிருப்புக்களில் ஏற்படும் சீர்குலைவுக்கான காப்புறுதி

அழுகிப் போகக்கூடிய சரக்குகளைக் களஞ்சியப்படுத்தி வைப்பதற்காக குளிரூட்டல் களஞ்சிய வசதிகளைப் பயன்படுத்தி வரும் தொழில் நிறுவனங்களுக்கு இது மிகவும் பொருத்தமான காப்புறுதிப் பத்திரமாக இருந்து வருகின்றது. இயந்திர செயலிழப்புகள் அல்லது பிற எதிர்பாராத சம்பவங்கள் காரணமாக களஞ்சியசாலைகளில் ஏற்படும் சிறிய வெப்ப நிலை மாற்றத்தினால் ஏற்படும் உணவுகள், மருந்துகள் அல்லது பூக்கள் போன்ற பொருட்களின் விரைவான அழிவோடு தொடர்புடைய அபாயங்களுக்கு எதிராக பாதுகாப்பதற்கு இந்தக் காப்புறுதித் திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

All Property Insurances

அனுகூலங்கள்

கையிருப்புச் சரக்குகளின் சீர்குலைவு

  • இயந்திர செயலிழப்பு அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் குளிர்பதன சேமிப்பகத்தின் வெப்பநிலை மாற்றமடைந்து அதன் மூலம் கையிருப்புச் சரக்குகளில் ஏற்படும் இழப்பு அல்லது சேதத்தை உள்ளடக்குகின்றது.

கையிருப்புக்கள் சேதமடைதல்

  • களஞ்சியசாலை அலகில் ஏற்படும் கசிவு அல்லது செயலிழப்பு காரணமாக கையிருப்புச் சரக்குகளில் ஏற்படும் பௌதீக ரீதியான சேதத்தை உள்ளடக்குகின்றது.

தகைமை

  • காப்புறுதிதாரர் குறிப்பிட்ட சொத்தின் மீது காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • காப்புறுதிப் பத்திரதாரர் இலங்கையின் சட்டவாக்கக் கட்டமைப்பின் பிரகாரம் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • காப்புறுதி செய்யப்படும் சொத்து/ ஆதனங்கள் இலங்கையின் புவியியல் எல்லைக்கு உட்பட்டிருத்தல் வேண்டும்.

இக் காப்பீடு, வணிகங்களுக்கு துல்லியமான சுற்றுச்சூழல் கட்டுப்பாடு தேவைப்படுகின்ற முக்கியமான சரக்குகளிலுள்ள தங்கள் முதலீட்டைப் பாதுகாக முடியும் என்பதையும், கையிருப்புச் சரக்குகளில் ஏற்படும் இழப்பினாலான அபாயத்தை திறம்பட நிர்வகிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது.

அல்லது உங்களுக்கு உள்ள ஏதேனும் கேள்விகளுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்