ஹோட்டல் உரிமையாளர்களுக்கான அனைத்துமடங்கிய காப்புறுதி

ஹோட்டல் உரிமையாளர்களுக்கான அனைத்துமடங்கிய காப்புறுதி

Sri Lanka Insurance General ஆனது, விருந்தோம்பல் துறையின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப ஹோட்டல் உரிமையாளர்களுக்கான விரிவான காப்புறுதியை வழங்குகிறது. இந்தப் பாலிசி, சொத்து / புரொப்பெர்டி , செயல்பாடுகள் மற்றும் சட்டப்பூர்வ கடப்பாடுகள் உட்பட அனைத்திற்கும் விரிவான பாதுகாப்பை அளிக்கிறது.

முக்கியமான அனுகூலங்கல்

வணிக இடையூறு

  • வணிக முடக்கத்தின்போது வருவாய் இழப்பை ஈடுசெய்யவும், மறுசீரமைப்புப் பணிகளின்போது நிதி ஆதாரத்தைப் பாதுகாக்கவும் உதவும் நிதி உதவி.

நம்பிக்கைக் காப்புறுதி

  • ஊழியர்களின் மோசடியால் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

காப்பீடு / பாதுகாப்பு

விரிவான சொத்துச் சேதப் பாதுகாப்பு

    தீ, மின்னல், வேண்டுமென்றே சேதம் விளைவித்தல், புயல், வெள்ளம், பூகம்பம், இயற்கை சீற்றங்கள், கொள்ளை, வேலை நிறுத்தம், கலவரம் மற்றும் உள்நாட்டு கலவரம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.

கட்டுமானம் மற்றும் புதுப்பித்தல் அபாயப் பாதுகாப்பு

    கட்டுமானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபாயங்கள், விரிவாக்கப் பணிகள் அல்லது புதுப்பித்தல்களை உள்ளடக்கிப் பாதுகாக்கிறது.

தீவிரவாதப் பாதுகாப்பு

    தீவிரவாத செயல்களால் ஏற்படும் இழப்புகளுக்கு, எதிர்பாராத சூழல்களிலும் முழுமையான பாதுகாப்பை வழங்கும் விருப்பத்தேர்வு.

மூன்றாம் தரப்பு பொறுப்பு மற்றும் தொடர்புடைய அபாயங்கள்

நம்பிக்கைக் காப்புறுதி பாதுகாப்பு

ஊழியர்களுக்கான தனிநபர் விபத்துப் பாதுகாப்பு

தீ மற்றும் தொடர்புடைய அபாயங்களால் ஏற்படும் இடையூறு காரணமாக வேலையின் செலவு அதிகரிப்பு

பணக் காப்பீடு (பயணத்தின்போது பணம், பாதுகாப்பு பெட்டகம் மற்றும் டிராயர்கள்)

கண்ணாடித் தகடுப் பாதுகாப்பு

விளம்பரப் பலகைப் பாதுகாப்பு

தகைமைகள்

  • உரிமைத் தேவை: ஹோட்டல் சொத்துக்களின் உரிமையாளர்களுக்கும் இயக்குபவர்களுக்கும் பொருந்தும்.
  • புவியியல் எல்லை: இலங்கைக்குள் அமைந்துள்ள சொத்துக்களுக்கு மட்டுமே பொருந்தும்.

SLIC General ஐ ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

SLIC General இல் ஹோட்டல் உரிமையாளர்களுக்கான விரிவான காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், தொழில்துறையின் தரத்தை மட்டுமல்லாமல், மாறிவரும் விருந்தோம்பல் துறையின் தேவைகளையும் முன்கூட்டியே அறிந்து பூர்த்தி செய்ய முடியும். இதன் மூலம், இணையற்ற பாதுகாப்பையும், திறமையான உரிமைகோரல் சேவையையும் பெற்று மன அமைதியுடன் செயல்படலாம்.

Or drop us an email with any questions you have